குளியல் தொட்டியில் ஆண்ட்ரியா – குழந்தைகள் பார்க்க வேண்டாம்.. எச்சரிக்கை விடுக்கும் பிசாசு – 2 – டீசர்..!

Author: Rajesh
29 April 2022, 4:43 pm
Quick Share

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படம் எடுக்கும் இயக்குநர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் இயக்கிய பிசாசு படம் பேய் படங்களிலேயே வித்தியாசமாக இருந்தது. அதன் காரணமாக அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வெற்றி பெற செய்தனர். இதனையடுத்து அவர் தற்போது பிசாசு 2 படத்தை எடுத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

நீண்ட நாள்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா ஆடையில்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ளதாகவும், இந்த காட்சியில் நடிப்பதற்கு இயக்குனர் கட்டாயப்படுத்தியதால் நடித்தேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து கொண்டு கையில் சிகரெட்டை பிடித்திருப்பதை போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் டீசருக்கான விளம்பரத்தில் குழந்தைகள் யாரும் இந்த டீசரை பார்க்க வேண்டாம் என படக்குழுவினர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. டீசருக்கு இவ்வளவு எச்சரிக்கை விடப்படுவதால், படம் வேரலேவலில் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 729

0

0