பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு தெரியுமா?.. சைலெண்ட் சம்பவம்னா இதுதான்..!

Author: Vignesh
12 February 2024, 5:06 pm
Priyanka Mohan -updatenews360
Quick Share

லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

தற்போது, இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வேல்மதி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இதுவரை எந்த படத்திலும் செய்யாத ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார்.

அடுத்ததாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஓஜி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், தமிழில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படத்திலும், கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகினின் சொத்து மதிப்பு 2 மில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 17 கோடியாகும். கதாநாயகியாக நடிக்க ஒரு படத்திற்கு ஒரு கோடி வரை பிரியங்கா மோகன் சம்பளமாக வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 285

0

0