பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் வீடியோ வைரல்..!

Author: Rajesh
4 June 2022, 4:27 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா. இவர் கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள்இ அமீர் மற்றும் பாவனி. இந்த மூவரும் தற்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீர் மற்றும் பாவனி இருக்க, பிரியங்கா அந்த நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர், பாவனி மற்றும் சில பிக் பாஸ் நண்பர்களுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு விதமான பில்டர் போட்டுள்ளதால் இந்த வீடியோவில் தெரியும் அனைவரும் வயதான தோற்றத்தில் தெரிகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 553

0

0