‘பெட்ரோல் வாங்க காசு இல்லை பிச்சை போடுங்க’: மத்திய மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
9 April 2022, 2:57 pm
Quick Share

கோவை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து பிச்சை எடுத்தும் ஒப்பாரி வைத்தும் மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ஆகியவற்றை குறைக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒப்பாரி வைத்தும், பிச்சை எடுத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எரிவாய் விலையை குறைக்க கோரியும், சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது தட்டுக்களை வைத்து பெட்ரோல், டீசல் வாங்க பணமில்லை பிச்சையிடுங்கள் எனக்கூறி யாசகம் கேட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஆட்டோ ஒன்றின் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 533

0

0