சுழல் ஜாம்பவான்கள் கும்ப்ளே, பிஎஸ் சந்திரசேகரை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்… வரலாற்று சாதனை படைத்து அசத்தல்…!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 12:53 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 396 ரன்களும், இங்கிலாந்து அணி 253 ரன்களும் சேர்த்தன. 143 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சுப்மன் கில்லின் சதத்ததால் 255 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இலக்கை நோக்கிய ஆடிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன் எடுத்திருந்தது. டக்கெட்டின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

தொடர்ந்து, 4வது நாள் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து வீரர்கள் ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் அடுத்தடுத்து கைப்பற்றினார். ஒல்லி போப் விக்கெட்டை எடுத்த போது, இந்திய ஜாம்பவான்களான பிஎஸ் சந்திரசேகர் மற்றும் அனில் கும்ப்ளேவின் வரலாற்று சாதனையை அஸ்வின் முறியடித்தார்.

அதாவது, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அஸ்வின் 96 விக்கெட்டுக்களும், பிஎஸ் சந்திரசேகர் 95 விக்கெட்டுக்களும், கும்ப்ளே 92 விக்கெட்டுக்களும் எடுத்துள்ளனர்.

Views: - 406

0

0