கூட்டுறவு சங்கத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது.. விசாரணைக்கு பின் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 8:24 pm
Minister I Periasamy - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : 10 ஆண்டு காலத்தில் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 1000 கோடிகள் ஊழல் நடத்தப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வீரகல்லில் தமிழகத்தில் முதன் முறையாக கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில் சென்ற ஆட்சிக்காலத்தில் மாநில அரசு ஐந்து கல்லூரிகளை கூட திறக்கப்படவில்லை ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் 1435 ரூபாய் கல்விக் கட்டணத்தில் முப்பத்தி மூன்று கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்க சேர்ந்து வருகின்றனர் என்றும், சென்ற ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதற்கான விசாரணைகள் நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் கூட்டுறவு சங்க ஊழல்களில் ஈடுபட்டவர்களில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பேட்டி அளித்தார்

Views: - 427

0

0