சனாதனத்தை ஒழிக்கறனு சொல்லி காங்., ஆட்சியை ஒழிச்சுகட்டிட்டீங்க.. திமுகவுக்கு வாழ்த்துக்கள் : தமிழக பாஜக விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 7:46 pm
udg
Quick Share

சனாதனத்தை ஒழிக்கறனு சொல்லி காங்., ஆட்சியை ஒழிச்சுகட்டிட்டீங்க.. திமுகவுக்கு வாழ்த்துக்கள் : தமிழக பாஜக விமர்சனம்!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கே சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அது போல் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி இருந்தது.

இந்த நிலையில் தற்போது 4 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இண்டியா கூட்டணியில் சேர்த்ததுக்கு சனாதனம் குறித்து பிளான் செய்து பேசியே காங்கிரஸ் ஆட்சியை ஒழிச்சிக்கட்டிடீங்க என பாஜக மூத்த தலைவர் கே.டி.ராகவன் திமுகவை கிண்டலாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கே.டி.ராகவன் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள I.N.D.I.A கூட்டணியில் சேர்த்ததுக்கு ஐந்து மாநில தேர்தல் நடக்க இருக்கிற சமயத்துல பிளான் பன்னி “சனாதனத்தை ஒழிப்போம்” னு சொல்லி சொல்லியே காங்கிரஸ் ஆட்சியையே ஒழிச்சிக்கட்டிடீங்க! திமுகவுக்கு பாராட்டுகள்! என தெரிவித்துள்ளார்.

Views: - 101

0

0