கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம் : பாலியல் புகார் எதிரொலி… அடுத்தடுத்து விலகிய அமைச்சர்கள்… போரிஸ் ஜான்சன் எடுத்த திடீர் முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 6:11 pm
Boris Jhonson - Updatenews360
Quick Share

போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பிரிட்டனில் கடந்த 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடித்தது. போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமரானார்.

அண்மையில் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு போரிஸ் ஜான்சன் கட்சியில் பதவி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது சொந்த கட்சியினரே ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்தனர்.

போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாமல் போனது. இதனை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தனது பிரதமர் பதவியை முதலில் ராஜினாமா செய்தார் ஜான்சன்.

கட்சியிலும் தனக்கு எதிரான கோஷங்கள் அதிகமாகவே, தனது கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் போரிஸ் ஜான்சன் விலகி கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 1444

0

0