வடிவேலுவின் புதிய ரகளை – அதுவும் யாரு கூடன்னு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
17 April 2022, 4:39 pm
Quick Share

கோலிவுட் நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவுக்கு என்று தனி பாணி உண்டு. மற்றவர்களை கிண்டல் செய்பவர்கள் மத்தியில் வடிவேலு தன்னை தானே கிண்டல் செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர்.

ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் காமெடி சேனல்களில் இருந்து மீம்ஸ்வரை வடிவேலுவே ஹீரோவாக திகழ்ந்தார். இந்தச் சூழலில், வடிவேலு தற்பபோது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

அவரது வருகை நகைச்சுவைக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா வடிவேலுவை சமீபத்தில் சந்தித்தார்.

அப்போது மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் ஸ்டீவ் வாக் கதாபாத்திரத்தில் நடித்து தான் பாடிய சிங் இன் தி ரெயின் என்ற பாடலை பாடினார். அதனை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நட்பு’ என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

Views: - 714

0

0