10 சதவீத தோனியாக இருந்தாலே போதும்: ஆஸி வீரரின் ஆசை!

26 January 2021, 9:38 pm
Quick Share

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பென் டங்க், இந்திய அணிக்காக தோனி செயல்பட்டதில் 10 சதவீதம் தனது அணிக்காக செயல்பட்டாலே தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக வெறும் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள டங்க், சர்வதேச கிரிக்கெட்டி ல் நம்பர்-1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தான் என தெரிவித்துள்ளார். போட்டியின் போத் தோனியின் அமைதியான அணுகுமுறை தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு ஒருபடி மேலே போய் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் போது அந்த அணியின் மேனேஜரான ரசல் ராதகிருஷ்ணனிடம், ஐபிஎல் போட்டியின் போது இது போன்ற தருணத்தில் தோனி எப்படி செயல்படுவார் என்று கேட்டதாகவும் டங்க் தெரிவித்துள்ளார். ராதாகிருஷ்ணன் சிஎஸ்கே அணியின் மேனேஜராஜவும் உள்ளார்.

இதுதொடர்பாக டங்க் கூறுகையில்,“சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை நாம் பார்த்ததிலேயே தோனி தான் நம்பர்-1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். நீண்ட காலமாக அவர் கிரிக்கெட்டில் விளையாடிய விதம் வியப்பு அளிக்கிறது. இதற்கு அவரின் சாதனைகளே மிகப்பெரிய சான்று. வெற்றிக்கு சாத்தியமே இல்லை என்ற நிலையில் இருந்து கூட அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் தோனி. தோனி செயல்பட்ட விதத்தில் 5 முதல் 10 சதவீதம் நான் செயல்பட்டாலே எனக்கு மகிழ்ச்சி தான்” என்றார்.

இடதுகை பேட்ஸ்மேனான டங்க், தற்போது அபிதாபியில் நடக்கும் டி-10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளார். நாளை மறுநாள் துவங்கும் இந்த தொடர் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் ஐசிசி வெளியிட்ட கடந்த 10 பத்தாண்டில் சிறந்த ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கு கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார். மேலும் கடந்த 10 ஆண்டில் சிறந்த விளையாட்டு உணர்வு கொண்ட வீரர் என்ற விருதையும் தோனி பெற்றார்.

Views: - 10

0

0