சச்சின் மகன் உட்பட 1097 பேர் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பு!

5 February 2021, 10:08 pm
Quick Share

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகன் சச்சின் உட்பட 1097 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பெரும்பாலும் அதிகமாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன், 21 வயதான இவர், சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரியானா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அறிமுகமானார். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க அர்ஜுன் தகுதி பெற்றார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 6 மாத தாமதத்திற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட இருந்தது. ஆனால் தற்போது ஐபிஎல் தொடர் துவங்கக் குறுகிய காலமே உள்ள நிலையில் இந்த மெகா ஏலத்தைத் திட்டமிட்ட படி நடத்த முடியாது என்பதால் இந்த மெகா ஏலத்தை அடுத்த ஆண்டு பிசிசிஐ ஒத்திவைத்தது.

அதற்குப் பதிலாக இந்த ஆண்டு மினி ஏலம் தான் நடத்தப்படும் என்று பிசிசிஐ முன்னதாகவே அறிவித்திருந்தது. இதற்கிடையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. இதில் மொத்தமாக 1097 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 56 பேர் இந்த வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இடம் பெறவில்லை. இதேபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான ஜோ ரூட்டின் பெயரும் இந்த பட்டியலில் இல்லை.

சச்சினின் மகன் அர்ஜுனின் அடிப்படை தொகை ரூ. 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், மெயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், மார் வுட், லியம் பிளங்கட், கோலிங் இங்ராம் உள்ளிட்ட வெளிநாட்டு சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களுக்கு ரூ. 2 கோடி அடிப்படை தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வயதுக்கு ஏற்ப அர்ஜுன் மும்பை அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்று வந்தார். இதற்கிடையில் இந்தியச் சர்வதேச அணிக்கான வலைப்பயிற்சிக்கான பலராக அர்ஜுன் செயல்பட்டுள்ளார் இவர். கடந்த 2018 இலங்கை அணிக்கு எதிரான பங்கேற்ற 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியிலும் அர்ஜுன் விளையாடி உள்ளார்.

Views: - 0

0

0