டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: “வாத்தியாராக களமிறங்கும் தல தோனி”

Author: Udhayakumar Raman
8 September 2021, 10:31 pm
Quick Share

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துவிட்டன. மேலும், சில நாடுகள் அடுத்த வாரத்திற்குள் தங்கள் அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இதற்கான, வேலைகளையும் பிசிசிஐ தீவிரமாக செய்து வந்த நிலையில் தற்போது அணியை அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான அணியில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின் இடம் பெற்றுள்ளனர். டி20 உலககோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் ஆலோசகராக தோனி இருப்பார் என பிசிசிஐ துணை தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யாகுமார், இஷான் கிஷனுக்கும் அணியில் இடம்பெற்றுள்ளார். புவ்னேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ரவீந்தர ஜடேஹா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Views: - 519

0

0