2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் : பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் அதிரடி!!

13 November 2020, 12:35 pm
Olympic - Updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் ஸ்தம்பித்தன. மேலும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்கள் வீட்டில் முடங்க வேண்டிய சூழ்நிலைக்க தள்ளப்பட்டனர். இதனால் சர்வதேச விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

தளர்வுகளுக்கு பின் பல்வேறு கொரோனா விதிமுறைகள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெற வேண்டிய ஒலிம்பிக் கோட்டிகள் 2021ஆம் ஆண்டு நடைபெறும் என ன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

Thomas Bach, President of the International Olympic Committee (IOC).

ஜப்பானில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக உள்ளோம் என பன்னாட்டு ஒலிம்பிக் ஆணைய தலைவர் தாமஸ் பாக், கூறியுள்ளார். கொரோனா நிலைகளுக்கு ஏற்ப போதுமான பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Views: - 36

0

0