இங்.,க்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் : 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Author: Udhayakumar Raman
6 September 2021, 9:41 pm
india vs england - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவலில் நடந்து வருகிறது.இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது.ரோகித் சர்மாவின் (127) சதத்தோடு, புஜாரா (61), ஷர்துல் தாகூர் (60), பண்ட் (50), கேஎல் ராகுல் (46), கோலி (44) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. 367 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று தனது ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள், பர்ன்ஸ் மற்றும் ஹமீது சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 5வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்த இணை நிதானமாகவே ஆடியது. இருவரும் 100 ரன்களை சேர்த்த போது, அரைசதம் விளாசிய பர்ன்ஸ் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, வந்த மலனும் 5 ரன்னில் ரன் அவுட்டானார். சற்று நிலைத்து நின்ற ஹசீப் ஹமீத் 63 ரன்னில் வெளியேறினார். ஆனால், பிற இங்கிலாந்து வீரர்களான போப் 2 ரன்னிலும், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோ ரூட் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Views: - 438

1

0