3 வீராங்கனைகள்… 2 வீரர்கள்… டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜொலிக்கப் போகும் தமிழக முகங்கள்…!!

6 July 2021, 6:58 pm
tn players - updatenews360
Quick Share

டோக்கியோவில் வரும் 23ம் தி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்பேற்பதற்காக 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. அதில், கலப்பு 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு வீரர்களும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இவர்கள் நிச்சயம் பதக்கம் வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று பயிற்சியாளர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Views: - 435

0

0