இந்த காயங்களுக்கு எல்லாம் ஐபிஎல் தொடர் தான் காரணம்: ஆஸி பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

13 January 2021, 8:31 pm
Quick Share

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் அதிகளவில் காயமடைய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் மிக முக்கிய காரணம் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் காயத்தால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் முக்கிய காரணம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குற்றம் சாட்டியுள்ளார். ஆண்டுதோறும் டி -20 தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகச் சர்வதேச போட்டிகளுடன் ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் 11ம் தேதி வரை இந்த தொடரில் நடத்தப்பட்டது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய தொடர் துவங்கியது. துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா சென்ற வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில்,“இந்த ஆண்டு நடக்கும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் பல பேர் காயமடைவதைப் பார்க்க முடிகிறது. ஒருநாள் தொடரிலும் இதே நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஐபிஎல் நடத்தப்பட்ட மாதம் தான். நான் ஐபிஎல் தொடரை வெறுக்கவில்லை. நான் அந்த தொடரை மிகவும் நேசிக்கிறேன். மேலும் சொல்லப்போனால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட கை கொடுக்கிறது. ஆனால் தாமதமாக நடத்தப்பட்டது தான் பிரச்சனைக்குக் காரணமாக அமைந்தது” என்றார்.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் காயமடைந்தனர். இந்திய அணியின் முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோரும் காயமடைந்தனர். ஆனால் பும்ரா 50% உடற்தகுதியுடன் இருந்தால்கூட 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 7

0

0