கார் விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர்: நூலிழையில் உயிர்தப்பினார்…!!

24 February 2021, 12:36 pm
us golf champion - updatenews360
Quick Share

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோல்ப் வரலாற்றில் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக வலம் வரும் டைகர் உட்ஸ். 15 முக்கிய கோல்ப் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். சமீபத்தில் தான் அவர் தனது முதுகில் ஐந்தாவதாக அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த உட்ஸ் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவரது கார் கவிழ்ந்து புல்வெளியில் உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் உட்ஸ் மட்டும் இருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 2

0

0