நடராஜனை இளைஞர்கள் உத்வேகமாக எடுத்துக்கோங்க : இந்திய இளம்வீரர்களுக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா..!!!

23 January 2021, 4:21 pm
thar - updatenews360
Quick Share

சென்னை : ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடிய நடராஜன் உள்பட 6 இளம் வீரர்களுக்கு தார் காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வெறும் இளம் வீரர்களை மட்டுமே வைத்து விளையாடிய இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில், இந்திய இளம் வீரர்களின் ஆட்டமும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த நிலையில், இளைஞர்களை ஊக்கும் விதமாக, ஆஸி.,க்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஷூப்மன் கில் மற்றும் நவ்தீப் சைனி உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்குவதாக
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

காரை வென்ற முகமது சிராஜ் அதில் பயணிக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

Views: - 11

0

0