நியூசி.யை தொடர்ந்து பின்வாங்கிய மேலும் ஒரு அணி : அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 11:38 am
pakistan team - updatenews360
Quick Share

நியூசிலாந்தைப் போலவே மேலும் ஒரு கிரிக்கெட் அணி, பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி தொடரை ரத்து செய்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, முதல் போட்டி தொடங்கவிருந்த ஒரு சில நிமிடங்களில் தொடரை ரத்து செய்து, நாடு திரும்பியது. இது பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் தொடரை உயிர்ப்பிக்க முயற்சி மேற்கொண்ட அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதே காரணத்தை காட்டி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்திருப்பது அந்நாட்டு வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் மேலும் ஷாக்காக அமைந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையே அக்., 13 மற்றும் 14ம் தேதிகளில் இரு டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அதேபோல, இங்கிலாந்து மகளிர் அணியும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது.

Views: - 365

0

0