இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் : பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2021, 6:01 pm
Nishad Kumar - Updatenews360
Quick Share

டோக்கியோ : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில்,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.

இதன்மூலம் ஆசிய சாதனையை படைத்துள்ள நிஷாத் குமார் மூலம் பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 45வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Views: - 540

0

0