டெல்லி வீரர் அன்ரிச் நார்ட்கேவிற்கு கொரோனா தொற்று உறுதி!

14 April 2021, 4:10 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அன்ரிச் நார்ட்கேவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ட்கே இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார். இதையடுத்து இன்று மற்றொரு தென் ஆப்ரிக்கா வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் அடுத்த 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படவுள்ளார். இதன்பிறகு பயோ பபுள் வளையத்திற்குள் இவர் மீண்டும் திரும்ப இரு கொரோனா சோதனை முடிவில் நெகட்டிவ் வர வேண்டும். முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நிதிஷ் ரானா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலத்திற்கு நுழைவதற்கு முன்பாக நார்ட்கேவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் அன்ரிச் நார்ட்கே, குயிண்டன் டி காக், டேவிட் மில்லர், மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் இந்திய வந்தனர்.

இதற்கிடையில் நார்ட்கேவுடன் ஒன்றாகப் பயணித்த ரபாடாவும் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அணியில் இடம் பெறாதது டெல்லி கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இவர்களை மீண்டும் சீகரமாகச் சேர்க்க அணி நிர்வாகம் முடிந்தளவு முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

Views: - 23

0

0