ஒலிம்பிக்கில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லையா? : மார்ச்சில் இறுதி முடிவு!

12 January 2021, 8:54 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து வரும் மார்ச் மாதம் முடிவு எடுக்கப்படும் என ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் அரசு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இணைந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 2021 ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்தது. இதற்கிடையில் தற்போது வைரஸ் பரவும் வேகம் குறையாத காரணத்தினால் ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களை அனுமதிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் பெற்றவர்களுக்கு மீண்டும் அந்த தொகையை திரும்பக் கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி தலைவர் மோரி கூறுகையில், “வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் இந்த சிக்கலுக்கு ஆலோசனை செய்து தீர்வு காணப்படும்” என்றார்.

இதற்கிடையில் தினமும் கொரோனா வைரசலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் சீனியர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் ஒருவர், கடந்த வாரம் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் வீராங்கனைகளுக்குத் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உறுதி செய்தார். கடந்த நவம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஆய்வுக்காகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு சார்பில் டோக்கியோ சென்றனர்.

அந்த ஆய்வுக்குப் பின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாட்ச் வீரர்களுக்குத் தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் அது கட்டாயம் அல்ல என்பதைத் தெரிவித்தார். இதற்கிடையில் முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 80% பேர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்

ஆனால் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மோரி ஒலிம்பிக்கை ஏற்பாடு செய்யும் குழுவினரை மேலும் ஒரு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியாது அதனால் இதற்குச் சாத்தியமே இல்லை. ரத்து செய்யவும் முடியாது என அவர் கூறினார்.

Views: - 9

0

0