அர்ஜுனா, கேல் ரத்னா விருதுக்கான பரிசுத் தொகை உயர்வு : மத்திய விளையாட்டுத்துறை அறிவிப்பு

29 August 2020, 10:51 am
Quick Share

அர்ஜுனா, கேல் ரத்னா விருதுக்கான பரிசுத் தொகையை உயர்த்துவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் வழஙகி கவுரவிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது? செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-விளையாட்டு மற்றும் சாகசங்களை புரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகையை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகையை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தி வழஙகப்பட உள்ளது, எனக் கூறினார்.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காணொலி மூலம் நடக்கிறது. விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0