பிரதமர் மோடியின் ஜனதா Curfewவை பாராட்டிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்…!

22 March 2020, 12:28 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸால் 260 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். இரண்டாம் கட்ட பாதிப்பில் இருக்கும் இந்தியா மூன்றாம் கட்டத்திற்கு செல்லகூடாதென்பதற்காக இந்திய அரசு இன்று காலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை யாரும் வெளியே செல்லகூடாதென்னும் விதியை “ஜனதா Curfew” என்னும் பெயரில் அனைவரையும் பின் பற்ற வலியுறுத்தினார்.


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ரபாமர் மோடியின் முயற்சியை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதி அவர் கூறியதாவது “நாடு முழுவதும் பின் ட்ராப் சைலென்ஸில் உள்ளது. இந்த மாதிரியான செயலை நான் எதிர்பார்க்கவில்லை”


“இந்த ஜனதா Curfewவை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி மட்டும் அமித் ஷா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிலை மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்தால் மக்களுக்கு இன்னும் நல்லவிதமாக அமைந்துவிடும்” என்று கூறியுள்ளார். இந்நேரம் வரை இந்தியாவில் பெரிதளவு சேதம் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply