கூண்டில் அடைச்சாங்க…ஓவர் பில்டப் செஞ்சாங்க… கடைசியில ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை: அஸ்வின்!

23 January 2021, 7:04 pm
ashwin - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலர்களை களமிறக்கியது தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாகச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, அந்த அணியின் கோட்டையாகக் கருதப்பட்ட காபா மைதானத்தில் வீழ்த்தி தொடரை 2 – 1 என வசப்படுத்தியது. ஆனால் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய பவுலர்களான அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சாமி மற்றும் உமேஷ் யாதவ் என யாரும் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், மற்றும் சார்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த புதிய பவுலர்கள் கூட்டணிதான் இந்திய அணிக்குக் கடைசி டெஸ்டில் வெற்றி பெறப் பெரிதும் கை கொடுத்ததாக இந்தியா சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் அஸ்வின் கூறுகையில், “நான் உண்மையில் காபா அவர்களின் கோட்டையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஏனென்றால் அவர்கள் அப்படி ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். அதேபோல அந்த அணியின் வீரர்கள் ஆயிரம் விக்கெட் வீழ்த்திய அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் மொத்தமே 13 பேர்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமற்ற அணியாக இருந்தனர். ஆனால் இந்திய அணிக்கு இந்த புது பவுலர்களின் கூட்டணி சாதகமாகி விட்டது என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து ஒரு வெளிநாட்டுத் தொடரை 20 வீரர்களை கொண்டு கைப்பற்றியது இதுவே முதல் முறை” என்றார்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா மீடியாக்கள் இந்திய அணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தது. அந்த அணியின் கேப்டனான டிம் பெயின் அதற்கு முந்தைய போட்டியில் அஸ்வினை காபாவில் சந்திக்கலாம் எனக் கூறியிருந்தார். இதுகுறித்துப் பேசிய அஸ்வின், “இந்திய அணி வீரர்கள் பபுளை விட்டு வெளியேறக்கூடாது. ஆனால் போட்டியைக் காண 15 ஆயிரம் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது எப்படி என்றால் மிருகங்களைக் கூண்டில் அடைத்து அதைப் பார்க்கக் கூட்டத்தை அனுமதிப்பது போல இருந்தது. அதற்குப் பின்பு அவர்களின் கோட்டையான காபாவில் இந்திய அணிக்குப் பங்கேற்க விருப்பம் இல்லை எனக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு ஸ்டம்பிங் வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அதற்குப் பின்பாக அவரை நான் பெரிதும் விரும்பத் துவங்கி விட்டேன். அவர் எங்களை அழைத்து ஸ்டம்பிங் வாய்ப்பை விட்டுக் கொடுத்து எங்களை வெற்றி பெறச் செய்தார். அதேபோல தொடரைக் கைப்பற்றப் பெரிதும் உதவினார்” என்றார்.

Views: - 6

0

0