ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10இல் இடம் பிடித்த அஸ்வின்… பாக் வீரர்கள் முன்னேற்றம்!

12 May 2021, 8:08 pm
Quick Share

ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பாகிஸ்தான் அணியை சேர்ந்தவர்கள் பவுலர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஜிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அந்த தொடரை 2 – 0 என கைப்பற்றியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹசன் அலி, சாகின் அப்ரிடி மற்றும் நவ்மான் அலி ஆகியோர் தங்கள் வாழ்நாள் சிறந்த இடத்தைப் எட்டியுள்ளனர். அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப்-10 இல் இடம் படித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஜிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி 6 இடங்கள் முன்னேறி 14 வது இடத்தை பிடித்தார். சாகின் அப்ரிடி 9 இடங்கள் முன்னேறி 22 வது இடத்துக்கு முன்னேறினார். சுழற்பந்து வீச்சாளரான நவ்மான் அலி 54 வது இடத்தில் இருந்து 46 வது இடத்தை ஏட்டினார். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த 3 பவுலர்கள் ஒரே டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் ஒரே டெஸ்ட் போட்டியில் மூன்று பவுலர்கள் 5 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 1993ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பாவுல் ரைபிள், ஷேன் வார்ன் மற்றும் டிம் மே ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் தான் டாப்-10 இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவரை தொடர்ந்து இந்திய வேகப்பந்து வீச்சாளரான இந்த ஜஸ்பிரீத் பும்ரா 11வது இடத்தில் உள்ளார். ஜிம்பாவே அணியை சேர்ந்த ரெஜிஸ்டர் பாவா 16 இடங்கள் முன்னேறி 81வது இடம் பிடித்தார்.

Views: - 335

0

0