கொரோனா வைரஸிற்காக பிரபல கிரிக்கெட் வீரர் எடுத்த விழிப்புணர்வான முடிவு…!

24 March 2020, 9:30 am
Quick Share

உலகத்தின் அழிவின் ஆரம்பமென்று சித்தரிக்கப்படும் இந்த கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை பல்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது வேகமெடுத்து பரவும் இந்த வைரஸால் இதுவரை 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் ஒன்பதுப்பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.


இதனால் பதற்றமடைந்த பல கோடிகளில் ஒருவரான பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் “அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படும். அதனால் இந்திய மக்கள் அனைவரும் கூடுதல் கவனமெடுத்து சுய விழிப்புணர்வுடன் இருந்து இந்த சூழலை கடக்க வேண்டும்”.


“இந்த விழிப்புணர்விற்காக எனது ட்விட்டர் பெயரை “let stay indoor இந்தியா” என்று மாற்றியுள்ளேன். இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாக உள்ளதால் இந்நோய் பரவ அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் அனைவரும் வீட்டிற்குள்ளே இருப்பது நல்லது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply