ஆஸி காவலர்களால் அசிங்கப்பட்ட இந்தியர் ரசிகரைத் தொடர்பு கொள்ள விரும்பும் அஸ்வின்!

24 January 2021, 8:43 pm
Quick Share

சிட்னி டெஸ்டின் போது ஆஸ்திரேலிய காவலர்கள் இந்திய ரசிகர் ஒருவரை இனவெறி பேச்சுக்கு ஆளாகினர். அவரை தொடர்பு கொள்வது எப்படி என இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் சிட்னியில் நடந்தது. இந்த போட்டியின் மூன்றாம் நாளிலிருந்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகினர். குறிப்பாக இந்திய அணியின் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை மிகவும் கேவலமாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் பேசி இருந்தனர்.

இந்திய வீரர்களைப் போலவே இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற ரசிகர் சிட்னியில் இனவெறி தாக்குதல் பேச்சிற்கு ஆஸ்திரேலிய காவலர்கள் மூலம் ஆளானார்.
இந்திய வீரர்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்களை எடுத்துவர அவர் முற்பட்டார். அப்போது இவரைப் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற கிருஷ்ணகுமார் இனவெறிக்கு எதிரான போஸ்டர்களை மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.

இது குறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், “அந்த பாதுகாவலர் என்னிடம் வந்து இந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் உனது இடம் எங்கேயோ அங்கேயே சென்று வெளிப்படுத்து என்றார். நான் இவ்வளவுக்கும் அந்த பேனரைப் பெரிய அளவில் தயார் செய்யவில்லை. எனது குழந்தைகளின் பேப்பர் ரோலை கொண்டு தான் தயாரித்திருந்தேன். எனக்கு நீதி வேண்டும். என்னை நிர்வாணப்படுத்தி அவர்கள் ரசிப்பது போல அங்கு நான் உணர்ந்தேன். நான் இனவெறிக்கு எதிராகப் போராட அங்கு அந்த பேனர்களைக் கொண்டு சென்றேன். ஆனால் அவர்கள் எதற்காக என்னைத் தடுத்து நிறுத்தினர் என்று தெரியவில்லை” என்றார்.

இந்த விஷயத்தைச் செய்தியாக வெளியிட்டிருந்த வைடு வேர்ல்டு ஆஃப் ஸ்போர்ஸ் நிறுவனத்தின் டிவிட்டர் பதிவிற்குப் பதில் அளித்துள்ள அஸ்வின், “கிருஷ்ணகுமாரை நான் எப்படி தொடர்பு கொள்வது என அதில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. அதேபோல காபா மைதானத்திலும் ஆஸ்திரேலிய அணி 32 ஆண்டுகளுக்குப் பின் வீழ்த்தி புது சரித்திரம் படைத்தது.

Views: - 0

0

0