என்ன கண்ணாடி இது பச்சைக் கலரு சிங்குச்சான்னு: பண்ட்டை காமெடி பீஸாக்கி ஓட்டிய வார்ன்!

16 January 2021, 7:22 pm
Rishab Pant - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணிந்திருந்த கண்ணாடியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் ஷேன் வார்ன் மற்றும் கெர்ரி ஓ கெஃபி ஆகியோர் கேலி செய்துள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்ல்பேனில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து 307 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் பண்ட அணிந்திருந்த கண்ணாடியை ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வார்ன் மற்றும் கெர்ரி ஓ கெஃபி ஆகியோர் ‘நேரடியாக ஸ்டேஷனிலிருந்து வெளிவந்தது போல் உள்ளது’ எனக் கிண்டல் செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மஞ்சள் மற்றும் நீள நிறம் அடங்கிய பளிச்சென்று தெரியக்கூடிய கண்ணாடியை அணிந்து விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த கண்ணாடி குறித்து ஷேன் வார்ன் மற்றும் கெர்ரி ஆகியோர் கிரிக்கெட் வர்ணனையின் நேரலையிலேயே கேலி செய்தனர்.

வார்ன்: ரிஷப் பண்ட் அணிந்துள்ள கண்ணாடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நேரடியாக சர்வீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்தது போல உள்ளது அல்லவா?

கெர்ரி : அவை சர்வோஸ் போன்று உள்ளது. மேலும் அவர் சில பூக்களும் வாங்கி வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

“இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவைகள் சேதம் அடைந்து இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்போதுதான் அதைக் குப்பையில் போடுவார்கள். என்ற அர்த்தத்தில் நான் சொன்னேன்”.

என்று கூறிவிட்டு இருவரும் நக்கலாகச் சிரித்துக்கொண்டனர். இவர்கள் கேலி செய்து சிரித்த வீடியோ தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் எதிரணி வீரர்கள் குறித்துப் பேசும் இப்படிப்பட்ட நக்கல் பேச்சு ரசிகர்களின் மனநிலையையும் அதே போக்கிற்குக் கொண்டு செல்லும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு அதில் எதிரணி வீரர்களுக்கும் சம மரியாதை அளிக்க வேண்டும் என்பதை இது போன்ற வர்ணனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 97 ரன்கள் அடித்து கைகொடுக்க, இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்யப் பெரிதும் உதவியது. இதனால் இந்த தொடர் தற்போதும் 1 – 1 எனச் சமநிலையில் உள்ளது. ஆனால் நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி உள்ளது எனலாம். ஏன் என்றால் முதல் இன்னிங்சில் இந்திய அணி தற்போது 307 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை செய்திகளிலிருந்து ஒத்தி வைப்பது மிகவும் கடினமான விஷயம் தான். இதற்குக் காரணம் போட்டியின் போது ரிஷப் பண்ட் நடந்து கொள்ளும் முறையாகும். இவர் தனது இரண்டு விக்கெட் கீப்பிங் கிளவுசையும் கையில் கழட்டி வைத்திருப்பார் அல்லது ஏதாவது விசித்திரமாகவும் விசித்திரமாகவும் கத்திக் கொண்டே இருப்பார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிவிடும். இதுபோன்ற விஷயங்கள் ரிஷப் பண்ட் குறித்து எதுவும் வரவில்லை என்றால் அவரின் கண்ணாடிக்காகச் செய்தியாகிவிடுகிறார்.

Views: - 6

0

0