ரிசெர்வ் முறையில் நடக்கவிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி – ஆஸ்திரேலியா அதிரடி…!

21 March 2020, 1:42 pm
Quick Share

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற மகளிர்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியது. மிகவும் எளிய முறையில் ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்த தொடரில் மழையால் அரையிறுதி போட்டிகள் பாதிப்படைந்தது.


இந்தியாவிற்கும் இங்கிலாந்து அணிக்குமிடையே நடைப்பெறவிருந்த அரையிறுதியாட்டம் மழையால் கைவிடப்பட்டு புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. அதேப்போல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் மழை குறுக்கிட்டு டி/L முறையால் ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றது.


இந்த நிலை ஆண்கள் உலகக்கோப்பையில் நடக்கக்கூடாதென்பதற்காக ரிசெர்வ் முறையில் இரையிறுதிப்போட்டிகள் நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிட்னியில் நவம்பர் 11 மற்றும் அடேலைட்டில் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் அரையிறுதிப்போட்டிகள் ரிசெர்வ் முறையில் நடைப்பெறும். நவம்பர் 15 ஆம் தேதியன்று இறுதிப்போட்டி நடைப்பெறுமென்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply