3வது டெஸ்டிலும் படுமோசம்… இங்கிலாந்து படுதோல்வி : ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி…!!!

Author: Babu Lakshmanan
28 December 2021, 9:33 am
ausee win - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து, நேற்று 2வது நாள் ஆட்டத்தை விளையாடிய ஆஸ்திரேலியா

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஹாரிஸ் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டையும், ஸ்டோக்ஸ் மற்றும் லீச் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து,2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்த நிலையில், இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேமரூன் கிரீன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Views: - 961

0

0