ஆஸி., டி20 வரலாற்றில் மோசம் : முதல்முறையாக வங்கதேசத்திடம் ஒயிட் வாஷ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan7 August 2021, 11:52 am
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை முதல்முறையாக 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேசம் அணி சாதனை படைத்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவிய நிலையில், அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு, கேப்டன் மக்மதுல்லா (52) உதவியுடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, எதிரணியின் சிறப்பான பந்து வீச்சால் திணறியது. கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியால் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. மிட்செல் மார்ஷ் 51 ரன்னும், மெக்டொமெட் 35 ரன்னும் எடுத்தனர்.
10 ரன்களில் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை முதல்முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
0
0