இந்தியாவை எதிர்கொள்ளும் இளம் ஆஸ்திரேலியா..!! டெஸ்ட் தொடருக்கான அணியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு..!!

12 November 2020, 12:05 pm
India-vs-Australia- test - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, தலா 3 டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்தத் தொடரில் அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுககு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தற்போது டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. இதில், பல்வேறு புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட் ஆகியோர் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க உள்ளனர்.

ஆஸி., டெஸ்ட் அணி வீரர்களின் முழுவிவரம் :-

டிம் பெய்ன் (கேப்டன்), மார்னஸ் லபுசேன், டேவிர் வார்னர், ஸ்டீவ் சுமித், மேத்யு வாடே, ஜோபர்னர்ஸ், கும்மின்ஸ், ஹாசல்வுட், டிரெவிஸ்ஹெட், நாதன் லயன், பேட்டின்சன், ஸ்டார்க், புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட்.

Views: - 16

0

0