இமாலய இலக்கை எட்ட முடியாமல் திணறிய இந்திய அணி வீரர்கள் : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி!!

29 November 2020, 5:22 pm
Aus Won - Updatenews360
Quick Share

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி, ,3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி சிட்டினியில் நடைபெற்று வருகிறது..

India vs Australia 2020 Live Score, 2nd ODI Match at Sydney: Hosts win by  51 runs, seal series 2-0 - Firstcricket News, Firstpost

டாஸ் வென்று முதலில் பேட்டிங்க செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், பின்ச், மார்னஸ், மற்றும் மேக்ஸ்வெல் நால்வரும் அரை சதமடிக்க, ஸிமித் அபாரமாக ஆடி இரண்டாவது போட்டியிலும் சதமடித்தார்.

India vs Australia 2nd ODI Live Streaming, Ind vs Aus 2nd ODI Live Cricket  Score Streaming Online on Sony Ten 1 and 3, Sony Liv, Sony Six, DD Sports

இதையடுத்து 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது 30 ரன்களில் எடுத்திருந்த தவான் ஹசில்வுட் பந்தில் வெளியேறினார். இதையடுத்து மயங்க அகர்வாலுடன் இணைந்த கோலி, அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

IND vs AUS 2nd ODI: India concedes 100+ opening partnership in three  consecutive matches, creates history - See Cricket

மயங்க் அகர்வால் 28 ரன்களில் வெளியேற, மறுமுனை வந்த ஸ்ரேயஸ் ஐயர் 38 ரன்களில் வெளியேற்னிர். இதையடுத்து கோலியுடன்இணைந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார்.

மறுபுறம் விளையாடிய கோலி 89 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஹர்திக் பாண்டியா ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் கம்மின்ஸ் பந்தில் ஹர்திக் 28 ரன்களுடன் வெளியேற, ஷம்பா பந்தில் ராகுலு 76 ரன்னில் அவுட்டனார். பின்னர் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 11 பந்தில் 24 ரன்னில் அவுட் ஆனார்.

Live Cricket Streaming India vs Australia 2nd ODI: When And Where to Watch IND  vs AUS Stream Live Cricket Match Streaming On SonyLIV Jio TV Live Cricket  and Sony Ten Live

அடுத்தடுத்து வந்த இந்திய அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் இந்திய அணி நிர்ணயகிப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Views: - 23

0

0