தல தோனி, டான் ரோஹித், கிங் கோலியை விட ஐபிஎல் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பேட் கம்மின்ஸ்!

24 January 2021, 9:24 pm
Cummins - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை விட இந்த ஆண்டு ஐபிஎல் மூலம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அதிகமாகச் சம்பாதிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஐபிஎல் தொடரின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 15.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலில் கொல்கத்தா அணி இவரைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான கம்மின்ஸ் இந்த ஆண்டு புதிய சாதனை ஐபிஎல் அரங்கில் படைக்க உள்ளார்.

இந்த சாதனை மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் கம்மின்ஸ். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் அரங்கில் முதல் தரத் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலுக்குச் சம்பளமாக அதிகபட்சமாக ரூபாய் 15 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியையும் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியையும் தக்கவைத்து. ஆனால் இவர்களின் தற்போதைய சம்பளம் ரூபாய் 15 கோடி ஆக உள்ள நிலையில், கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் இந்தாண்டும் ரூ. 15.5 கோடி பெறவுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்தாண்டு 14 போட்டிகளில் விளையாடிய கம்மின்ஸ் 12 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. ஆனால் சமீபத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டார். இவர் நான்கு போட்டிகளில் மொத்தமாக 21 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இவரின் அசத்தல் பார்மை ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் தொடர்வார் என கொல்கத்தா அணி நம்புவதால், இவரைத் தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ள கொல்கத்தா அணி கைவசம் 10.85 கோடி உள்ளது. இதன் மூலம் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகளில் இரண்டாவது குறைந்த தொகை கொண்ட அணியாகக் கொல்கத்தா அணியை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் மினி ஏலம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்க உள்ளதாகக் கூறப்பட்டாலும் உறுதியான தேதியை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதனால் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரில் அசத்தும் வீரர்களுக்கு இந்த ஏலத்தில் ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
[8:36 PM, 1/24/2021] U/A:

Views: - 0

0

0