கோலியை காண்டாக்கிய பேரஸ்டோவ் : அல்லாக்காக வெற்றியை தூக்கிக் கொடுத்த சஹால்..!

21 September 2020, 11:32 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

துபாயில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்கள் பல்லீகல், பின்ச் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். படிக்கல் (53), பின்ச் (29), டிவில்லியர்ஸ் (51) என பங்களிப்பு கொடுக்க, அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு பேரஸ்டோ, மணீஸ் பாண்டேவை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் ஐதராபாத் அணியின் பக்கமே வெற்றி இருந்தது. ஆனால், சஹால், சைனி அபாரமாக பந்து வீசி வெற்றியை, தங்களது பக்கம் திருப்பினர். பேர்ஸ்டோவ் 61 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் அந்த அணியால் 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: - 12

0

0