கொரோனாவை கட்டுப்படுத்த வீரர்கள் வழங்கிய சம்பளம்..!!

26 March 2020, 11:34 am
Bangladesh Team-Updatenews360
Quick Share

வங்காளதேசம் : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வங்காளதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது அரை மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

கொரோனாவால் உலக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எல்லா பகுதிகளிலும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்தந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது, நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாங்காளதேசத்தில் இதுவைர கொரோனாவுக்கு 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு அரசும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் வங்காளதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது அரை மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த வங்காளதேசம் அரசுக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் வங்காளதேசம் கிரிக்கெட் போர்டில் உள்ள மொத்தம் 27 வீரர்கள் தங்களது அரைமாத சம்பளத்தை நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 25 லட்சம் நன்கொடை வசூலாகும். இதனால் தொற்கை தடுக்க எங்களால் முடிந்த உதவி செய்த ஒரு நடவடிக்கையாக கருதுகிறோம் என வங்களாதேசம் கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.