பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நீக்கம் : பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளரும் விலகல்..?

19 August 2020, 8:30 am
barcilona - updatenews360
Quick Share

ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணி, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கால் இறுதியோடு வெளியேறியது. இது அந்த அணிக்கு கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டது. இந்த தோல்வியினால் அதிருப்தியடைந்த அணியின் நிர்வாகம், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டினை அதிரடி நீக்கியது.

இதையடுத்து, நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டு கோமேனை புதிய பயிற்சியாளராக நியமித்தது. ஆனால், அவரும் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, ரொனால்டு கோமேன் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 2020-21ம் ஆண்டு சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், அணியின் மூத்த வீரர் லுயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும் என நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.

இதனிடையே, நட்சத்திர வீரர் மெஸ்சி பார்சிலோனா அணியை விட்டு விலக விரும்புவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 25

0

0