ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்கும் ஐபிஎல் தொடர்!

31 January 2021, 7:13 pm
Quick Share

இந்தாண்டு நடக்கவுள்ள 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முழுமையாக நடத்தப்படும் என தெரிகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த பின் வரும் ஏப்ரல் 11ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரை துவங்கி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ சுருக்கி நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் விளைவாக விஜய் ஹசாரே டிராபி மற்றும் சீனியர் பெண்கள் ஒருநாள் தொடர் மட்டும் நடத்தப்பட உள்ளது .ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் முழுமையாக நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ, இந்த தொடரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை துவங்கும் தேதி குறித்து நிர்வாக கவுன்சில் கூட்டம் முடிவு தான் இறுதி முடிவு. ஆனால் பெரும்பாலும் இந்த தொடர் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் நிறைவடைகிறது. இதற்கு பின்பு 14வது ஐபில் கிரிக்கெட் போட்டி தொடரை துவங்குவது சரியாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையில் வீரர்களுக்கு தேவையான ஓய்வும் கிடைக்கும். அதேநேரம் ஐபிஎல் பைனல் போட்டியை வரும் ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கும் காரணத்தால், அந்நாட்டு வீரர்கள் பங்கேற்கும் தொடர்களும் வரும் மார்ச் மாதம் முடிவுக்கு வர உள்ளன.

இதைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பின் வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு வருகை தந்து போட்டியில் பங்கேற்க தனிமைப்படுத்தல் விதிக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. கடந்த வாரம் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

Views: - 0

0

0