என்ன ஒரு தாராளம்… இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ ரூ.10 கோடி நிதியுதவி..!!

21 June 2021, 4:42 pm
Quick Share

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

கொரோனாவால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் வரும் ஜுலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவியை பிசிசிஐ அளித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் விளையாட்டுத் துறையின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 345

0

0