‘விரைவில் பறக்க தயாராவேன்’ : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ‘தாதா’ நம்பிக்கை..!!!

By: Babu
7 January 2021, 11:25 am
ganguly - updatenews360
Quick Share

கொல்கத்தா : நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமுதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி, சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது பிசிசிஐ தலைவராக உள்ள இவர், தனது வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

sourav_ganguly_bcci_updatenews360

இதையடுத்து, மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவரது இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் மூலம் அதனை நீக்கும் சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பின் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் கங்குலி இருந்தார்.

இதையடுத்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் ஒரு நாள் ஓய்வு எடுத்தார். இந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மருத்துவமனைக்கு உடனடியாக வந்ததால் என் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது நலமாக இருக்கிறேன். விரைவில் பறப்பதற்கு தயாராகி விடுவேன் என நம்புகிறேன்,” எனக் கூறினார்.

கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், அவரது ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 46

0

0