மஜாப்பா… மஜாப்பா… மகளிர் கிரிக்கெட்டில் இருந்து உள்நாட்டு தொடர் ஆரம்பம்… அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ..!!

3 July 2021, 8:10 pm
dinesh karthik -updatenews360
Quick Share

நடப்பாண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 21ம் தேதி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அக்., 27ல் மகளிர் ஒருநாள் சேலஞ்சர் டிராபி நடக்கிறது.

அதேவேளையில், அக்.,20ம் தேதி ஆண்களுக்கான சையது முஸ்தக் அலி டி20 தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்., 19 வரை ரஞ்சி போட்டி நடத்தப்படுகிறது. பிறகு, பிப்ரவரி 23ல் விஜய் ஹசாரே தொடா நடக்கிறது.

Views: - 471

0

0