“இப்போ நீங்க உங்களுக்கு கேப்டனாக இருக்கவேண்டிய நேரம்” – மோடியின் ஊடரங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்…!

25 March 2020, 8:42 am
Quick Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்களுக்கான ஊடரங்கு ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதிவரை இந்த திட்டம் நீடிப்பதால் அந்நாளில் தொடங்கவிருக்கும் IPL போட்டிகள் ரத்தாகும் அபாயத்தில் உள்ளன. ஆனாலும் இந்த திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் தங்குடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி “இந்திய பிரதமரான மோடி ஜி கூறியதை அனைவரும் கடைப்பிடிப்பது இந்த வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது. எனவே அனைவரும் வீட்டிலிருந்தப்படியே இந்த கொரோனாவை விரட்டுவோம்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரையடுத்து முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி “இந்த நிலை விரைவில் மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் மற்ற வீரர்களான அஸ்வின், புஜாரா ஆகியோர் மோடியின் ஒத்துழைப்பு கொடுப்பதுப்போல் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆகா உயர்ந்துள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply