பிரிஸ்பேன் டெஸ்டில் மொத்தம் எத்தனை அடி தெரியுமா… தோள்பட்டையில் ரத்தம் உறைந்தது: புஜாரா!

30 January 2021, 11:02 pm
Pujara - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் புஜாரா 11 இடத்தில் தனது உடம்பில் காயம் அடைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதை இந்திய கிரிக்கெட் அணி
2 -1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக சுமார் 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக திகழ்ந்த பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி அசாத்தியமாக வெற்றி பெற்று புது சரித்திரம் படைத்தது. இந்த போட்டியின் 4வது இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர் கொண்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய பவுலர்கள் வீசய பவுண்சர்களால் இந்திய பேட்ஸ்மேன்கள் பலர் உடம்பில் அடிவாங்கி காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக கருதப்பட்ட புஜாரா தனது உடம்பில் சுமார் பதினோரு முறை காயமடைந்தார். இது குறித்து தற்போது புஜாரா பேசியுள்ளார். இதுகுறித்து புஜாரா கூறுகையில், “எனது தோள்பட்டையில் ஒரு பவுன்சர் தாக்கியபோது, தோள்பட்டையில் ரத்தம் உறைந்தது. ஆனால் தற்போது எல்லாம் செட்டில் ஆகி விட்டது. அந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன். விளையாட்டின் போது பவுன்சரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, ஹெல்மட் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளது.

ஆனால் எனது விரலில் ஒரு பந்து பட்டபோது வலி பொறுக்க முடியாத அளவு இருந்தது. அதுதான் ஏற்பட்ட காயத்திலேயே மிகவும் மோசமானதாக இருந்தது. நான் எனது விரல் உடைந்து விட்டது என்றே நினைத்தேன். மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பயிற்சி மேற்கொண்டபோது ஏற்கனவே அந்த விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து சிட்னி டெஸ்ட் போட்டியின் போதும் லேசான அசௌகரியம் இருந்தது. ஆனால் பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் அதே விரலில் காயம் பட்டது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு உண்மையில் ஆஸ்திரேலிய அணி பவுலர்களைத் தான் பாராட்ட வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கின் வீடியோக்களை பார்த்து அதற்கேற்ப ஒரு திட்டத்துடன் களமிறங்குகின்றனர். ஆனால் அவர்களின் அந்த திட்டத்திற்கு எதிர் தாக்குதலாக அதை உடைக்க உங்களுக்கு நிச்சயமாக பொறுமை வேண்டும். அவர்களின் திட்டத்தை ஆராய்ந்து உடைக்க வேண்டும். இதற்கு நிச்சயமாக பொறுமையாக காத்திருப்பது அவசியம்.

களத்தில் போட்டி வேறுவிதமாக சென்று கொண்டிருக்கும்போது விக்கெட்டை எளிதாக வீசிவிட்டு செல்ல முடியாது. அதற்கு மாறாக விக்கெட்டை காப்பாற்றி கொண்டு எதிர் அணிக்கு நெருக்கடியை அதிகரிக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் ஒரு இன்னிங்ஸை நீண்ட நேரம் விளையாடும் பொழுது, அது மற்றொரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட வாய்ப்பாக அமையும். அதைத்தான் நான் இந்த தொடரில் செயல்படுத்தினேன்” என்றார்.

Views: - 0

0

0