இவருக்கு ரூ. 14.25 கோடி கொடுத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் பெங்களூரு டீம்: ஹாக்!

22 February 2021, 10:58 pm
Quick Share

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெலுக்கு ரூபாய் 11.25 கோடி கொடுத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது பெங்களூரு அணி என முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை ரூ 14.25 கோடி கொடுத்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் பங்கேற்று வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் அவரை விடுவித்தது.

இந்த மோசமான தொடருக்குப் பின் நடந்த ஏலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு மேக்ஸ்வெல் ஏலம் எடுக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் தொடரிலும் தனது அதிரடி ஆட்டம் மூலம் எதிரணி வீரர்களை நடுங்க வைத்த பேட்ஸ்மேன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் மேக்ஸ்வெல். ஆனால் இவர் பங்கேற்றுள்ள ஒன்பது ஐபிஎல் தொடர்களில் வெறும் இரண்டு தொடர்களில் மட்டுமே மேக்ஸ்வெல் மிகப்பெரிய அளவில் சாதித்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில், “ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்தது என்று எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் ஒன்பது ஐபிஎல் தொடர்களில் வெறும் இரண்டு தொடர்களில் மட்டுமே அவர் சாதித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பெங்களூர் அணி நிச்சயமாக ரிஸ்க் எடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே அந்த அணியில் ஏபி டிவில்லியர்ஸ் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பினிஷர் வேலையை மிகச் சிறப்பாகவே அவர் செயல்படுத்தினார்.

ஆனால் இந்த முறை டிவிலியரிஸ் இடத்திற்கு மேக்ஸ்வெல்லை களமிறக்கி டிவிலியர்ஸை முன்னதாக களமிறங்கச் செய்து அதிக ஓவர்கள் பேட்டிங்கில் டிவிலியர்ஸை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பெங்களூரு அணி என்ன சிறப்பான திட்டங்களைத் தீட்டி இருந்தாலும் மேக்ஸ்வெலின் சமீபத்திய பார்மை ஒப்பிடுகையில் அவருக்குக் கிடைத்துள்ளது மிகப்பெரிய தொகையாகும். எப்போதும் தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் அவர் இடம்பெறச் செய்து ஒவ்வொரு முறையும் அணிகளை ஏலத்தில் எடுக்கும் செய்கிறார்” என்றார்.

Views: - 3

0

0