பிரிஸ்பேன் டெஸ்டின் 2வது நாள் ஆட்டத்தில் ‘டேரா’ போட்ட மழை : இந்திய அணி 62/2..!!

16 January 2021, 2:01 pm
rain-brisbane - updatenews360
Quick Share

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது நாள் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி லபுக்ஷனேவின் அபார சதத்தாலும், கேப்டன் பெயினின் அரைசதத்தினாலும், 369 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சைனி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு கில் 7 ரன்னிலும், ரோகித் சர்மா 44 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். 26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து, மழை பெய்ததால், 2வது நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.

Views: - 14

0

0