ஜஸ்பிரிட் பும்ராவிற்காக களத்தில் இறங்கிய இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்…!

13 February 2020, 4:48 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, இறுதியாக இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான ஒரு நாள் தொடரில் நடந்த மூன்று போட்டிகளிலும் தன்னுடைய முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை. இந்த மூன்றும் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இவ்வாறு ஒரு தொடர் முழுக்க விக்கெட் ஏதுமின்றி விளையாடியது பும்ராவிற்கு இதுதான் முதல் தடவை.


இதைப்பற்றி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான சாஹீர் கான் பேசுகையில் “ஜஸ்பிரிட் பும்ரா, அவரின் பந்துகளை தடுக்கும் நோக்குடன் விளையாடுபவர்களை சற்று வலுக்கொடுத்து தாக்கவேண்டும். அது ஏனோ கடந்த மூன்று ஆட்டங்களிலும் நான் அவரின் விளையாட்டு முறையில் நான் காணவில்லை” என்றார்.


மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஆஷிஷ் நெஹ்ரா “எல்லா ஆட்டங்களிலும் ஒரு விளையாட்டு வீரன் தனது முழு திறமையை காண்பிப்பது கடினம். இதுப்போன்று நிகழ்வுகள் நடப்பது இயற்கைதான். இதற்கு ஜஸ்பிரிட் பும்ரா விதிவிலக்கல்ல. அவருக்கு நேரம் கொடுங்கள். மீண்டும் கலக்குவார் ” என்று கூலாக பதில் சொன்னார்.

Leave a Reply

error: Content is protected !!