செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் நடக்குமா? சர்வதேச அட்டவணை சிக்கல்!

12 May 2021, 8:43 pm
Quick Share

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சர்வதேச அட்டவணைப்படி சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒத்தி வைப்பதைத் தவிர பிசிசிஐக்கு வேறு வழி இல்லாமல் போனது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை இந்த ஆண்டு இறுதியில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டதை போல தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதை தொடர்ந்து டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இதே போல வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டின் சர்வதேச அட்டவணை உள்ளதால் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஸ் படேல் டி20 உலக கோப்பை தொடர் நடத்துவதற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்போ ஐபிஎல் போட்டிகளை நடத்த உள்ள வாய்ப்புகள் குறித்து பார்க்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஒருவேளை இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முழுமையாக நடத்தப்படவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் போட்ர்டுக்கு ரூ 2000 முதல் 2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 347

0

0