டேவிட் வார்னர் மகளுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்த கேப்டன் கிங் கோலி!

30 January 2021, 10:31 pm
Warner Daughter -Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மகள் இண்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கையெழுத்திட்ட ஜெர்சி ஒன்றை பரிசளித்துள்ளார். இதை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1 – 2 என இழந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த போதும், அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னரின் மகள் இண்டி மகிழ்ச்சியாக உள்ளார். ஏனென்றால் இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து வார்னர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “நாங்கள் தொடரை இழந்து விட்டோம் என்று எனக்கு தெரியும். ஆனால் இங்கு ஒரு சிறுமி மகிழ்ச்சியாக உள்ளார். விளையாடிய ஏஜென்சியை பரிசளித்த விராட் கோலிக்கு நன்றி சொல்ல வேண்டும். இதை இண்டி மிகவும் நேசிக்கிறாள். டாடி மற்றும் ஆரோன் பின்ச்சைத் தவிர்த்து அவள் விராட் கோலியின் ரசிகை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் கேண்டிஸ் ஜோடிக்கு இவி மே, இண்டி ரே, இஸ்லா ரோஸ் என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான இண்டிக்கு தனது தந்தை டேவிட் வார்னர் ஐ விட விராட் கோலியை அதிகம் பிடிக்கும் என்று சமீபத்தில் வார்னரின் மனைவியான கேண்டீஸ் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கேண்டீஸ் கூறுகையில், “நாங்கள் கிரிக்கெட்டின் பின்பக்கத்திலிருந்து சிறுசிறு வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடுவோம். அதில் எனது மகன்கள் மிகவும் வேடிக்கையாக செயல்படுவார்கள். சில நேரம் டாடி போல ஆக வேண்டும் என்பார்கள். சில நேரம் ஆரோன் பின்ச் போல விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் எனது நடு குழந்தை நிச்சயமாக விராட் கோலி ஆக வேண்டும் என்று கூறுவாள். நான் ஒன்றும் இதை காமெடிக்காக தெரிவிக்கவில்லை. உண்மையில் அவள் விராட் கோலியின் தீவிர ரசிகை. களத்தில் நடப்பதுபோல இவர்களின் விளையாட்டிலும் சிறு சிறு ஸ்லெட்ஜிங் இருக்கும்” என்றார்.

Views: - 0

0

0