சென்னை அணியை கெட்டியாக பிடித்துக் கொண்ட கொரோனா : மேலும் ஒரு வீரருக்கு பாதிப்பு..!

29 August 2020, 3:38 pm
CSK-practise-updatenews360
Quick Share

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு வரும் செப்.,19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த 21ம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளரான தீபக் சஹாருக்குதான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 16

0

0